Thursday 25 October 2007

சூப்பர்மானின் ஆனாதிக்கம்

சூப்பர்மானின் ஆனாதிக்கம்
நாட்வெஸ்டில் லோன் எடுத்து
நல்ல காரெடுத்துநான் மீன்பிடிக்க போனா
நல்ல கட்டை -அந்த வல்ல பொட்டை
சொத்திப் பல்லோடு எட்டி விழுந்தால்.
பற்றியெடுத்த மட்டில்,வெட்டி விட முடியாது
கட்டிவிடு என்றால்.
உன் புலிப்பல்லை கழட்டி மண்வெட்டிக்குதவ ஆபிரிக்கா அனுப்பு.
ஆசிய குஞ்சுகளுக்குஉன் உடம்பெல்லாம் அடிச்சிருக்கும் ஆணிகளை அனுப்பு.
காதோரம் வழியும் உன் கண்றாவியை வேனுமென்றால்
Nஐhர்ஐ; புஸ்சுக்கு அனுப்பு.
நாரியில் படம்போட்டு
வயித்தில் சலங்கை கட்டும்
உன்விளையாட்டுப் புத்திக்கு
சேய் பிறந்தா நாயாகும்
நாய் பிறந்தா பேயாகும்
பேய் பிறந்தா நீயாகும்
ஆதலின்
ஓரு ஆறு பிள்ளை தத்தெடு
வீட்டை வித்துவிடுபூட்டை விழுங்கி பிளாட்பாரமாகிவிடு
என்றெல்லாம்
நான் கேக்கதிக்கித் தினறி
வத்தி வறண்டு
சிலம்புடைத்துச் சினந்து சீறி
மதுரைச் சிறியோடு- போக மனங்கொண்ட பாவாய்
சத்தி எடுத்தாளடா என் சித்தம் சிதறிவிழ
சத்தி எடுத்தாளடா
நாளைக்கு இனிநான் சூப்பர்மான் உடுப்புப் போட்டு
‘பாதர்’ உரிமைக்காக கட்டிடங்கள் ஏறவேண்டி வரும்

Friday 12 October 2007

சிரித்து மழுப்புதல் செய்

திரித்து திரித்து திரித்து திரிதலை தேய்ந்தபின்
சிரித்து மழுப்புதல் செய்

காத்தடிச்சு பறவையெல்லாம்
மேகத்தில் கரைஞ்சிருக்க
புயலடிச்சு புல்விழுங்கி
பூமிக்கு வயித்தடிக்க
பொச்சடிச்சு புட்டுண்ணும்
பேயன் மகனாகி
பாத்தடிச்சும் பாஸ்பன்ன
முடியலயே எக்சாம்.

திரித்து திரித்து திரித்து திரிதலை தேய்ந்தபின்
சிரித்து மழுப்புதல் செய்

மட்டை போட்டாலும்

மட்டை போட்டாலும்

[ மட்டை போட்டாலும் லோணை
மஐக் பாங்கில் எடுத்தாலும்
மல்ட்டி மில்லியர் ஆகாமல்
என் கட்டை வேகாது தோழா ]

பொட்டயாய் பிறந்த அம்மா பாவம்
ஒற்றைச் சுவர் கொண்ட
சொத்தை வீடொண்றில்
வெற்றுப் பேயனுக்கு பெத்தால்
பெத்தால், பெத்தால் - ஐயோ
எங்கள் பறட்டை நாய்க்குட்டி பெறவில்லை பிழையாய்
வற்றிப் போனதடா, சொத்து - அன்பு - மீண்டும் மீண்டும் சொத்து (மட்டை)

என்னை அனுப்ப காசு எங்கிருந்து பெற்றால்
பொண்னை அரித்தோ?
பொய்க்கு பூமி விற்றோ?
பிள்ளை வாளுக்கு பகலை விற்றோ? (மட்டை)

நானிங்கு வந்து தோடு குத்தித் திரிந்து
எண்ணிப் பதினெட்டு வருசம் தொலைத்தேன்.
வாழ்வை விட்டுத் தள்ளி
தோழ்வி ஒத்துக் கொண்டு
தண்ணியடித்து தலை கெட்டுத் திரிய தலைவிதியா எனக்கு?
எங்கள் குருட்டு மாமா*1 எம்
வாழ்வை இருட்டாக்க விடலாமா?
உயிரை மயிராய் பிடுங்க விடலாமா? (மட்டை)

சோத்துப் பருக்கைக்கு சுத்தித்திரிந்த
புறாவுக்கும் இடமில்லை*2
வெற்றுப் பணத்துக்கு வேலை செய்ய
விசாவுக்கும் இடமில்லை.
காற்றுண்டா வாழ?
தூக்குக் கயிற்றிலா தொங்க? (மட்டை)

மாதம் மூண்றைம்பது எடுத்து
பாதம் பாதம் முட்ட போறனை வாழும்
என் சக ஏழைகள்
கனவுண்டு வாழ
நல்ல பாட்டுண்டு நல்ல படமுண்டு என்காதீர்
பனம் மிஞ்சிய-இந்தியக் காரற்ற பணக்காரரின் கழிவில் என் முச்சுவிட
இடைவேளை தரவேண்டாம்.
அங்கு என் தோழனுக்கு அதுகூட இல்லை. (மட்டை)

ஐக்கிய ராச்சியத்தில் பத்திரிகை ஆசிரியர் நெஞ்சம்
இன்று முதலாளி வாழும் மஞ்சம்
மேர்டொக்*3 சொடக்குப் போட்டால்
படக்கென்று SUN மேற்கே உதிக்கும்
விடாக் கண்டனாக TIMES உம்
எங்கள் விதியோடு விளையாடும். (மட்டை)

மரியாதை மண் பரப்பி
கண்ணியம் சுற்றிக் கிடக்க இராணியாக நீர்
எலிசபத்தோ விக்டோரியாவோ?
அதுக்குப் பிறந்த குஞ்சோ?
வேட்டை மறுத்து கோட்டை புகுந்திற்றில்லை*4. (மட்டை)

அகதிகளை அரைத்து
அவர்தம் உயிர்களை வறுத்து
காலம் கரையவில்லை
சனங்கள் குத்தி உமக்கு நாம்
தூக்கு காவடி எடுக்கிறோம்.
இரத்த வறை ஏப்பம் விடும்
ஏசுக்களே பிதாக்களே
பொல்லாத ஐனாதிபதிகளுக்குப் பிறக்கும்
பிள்ளைகளே*5
நீங்கள் உண்ணி உண்ணி இழுக்க
என் தோல் கீழுpருக்கும் நரம்புதான் வலிக்கும்
உரம் கொண்ட உள்ளம் ஒருநாள் சத்தியமாய் வெடிக்கும் -அந்த
சரித்திரத்தில் சந்திப்போம் (மட்டை)


குறிப்புகள்
1
ஐக்கிய இராச்சியத்தின் முன்னால் உள்நாட்டு அமைச்சர் டேவிட் பிளாங்கட் கண்ணுக்கு நியாயங்கள் மட்டுமல்ல நல்ல கலர் கலரான சீனறிகளும் கூட தெரிந்ததில்லை.
2
தன்பாட்டுக்கு ஆரும் தாறத திண்டு கொண்டு நின்ற புறாக் கூட்டங்களை ட்ரவால்கர் ஸ்காயரில் இருந்து கலைத்து விட்டார்கள். புறாக்களுக்கு தீனி போட தடை வேறு. புறா எச்சம் லண்டன் ராஐ பரம்பரை சிலைகளை அசிங்கப் படுத்துகிறதாம்.
3
மேர்டொக் பத்திரிகை உலகில் செய்து வரும் மன்னராட்சி கொடுமையானது. இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி ஸ்கை, மற்றும் பத்திரிகைகள் சன், டைம்ஸ்,; பாலியல் புத்தகங்கள் மட்டுமின்றி, நியுயோர்க் டைம்ஸ் முதலான பல முன்னனி அமெரிக்க பத்திரிகைகள் மற்றும் ஆஸதிரேலிய முண்னனி பத்திரிகைகள் எல்லாம் அவன் கைவசமே உள்ளது. முன்னால் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் உட்பட பெரும் பெரும் அரசியல் தலைகள் எல்லாம் உம்மென்றால் இருந்து இம்மென்றால் எழுந்து சொல்வழி கேட்டு அடிபணிந்து கிடக்கிறார்கள்.
4
வேட்டையாடும் உரிமைக்காக தவியாய் தவிக்கிறது அரச பரம்பரை. புhராளுமண்றம் வேட்டையாடுதலை தடைசெய்ய முயற்சியெடுத்த பொழுது நான் இனி வேறு நாட்டில் போய் வாழப் போகிறேன் என்று இளவரசர் சார்ள்ஸ் குத்தலாக அறிக்கை விட்டது ஞாபகமிருக்குமே.
5
முன்னால் அமெரிக்க ஐனாதிபதி புஸ்சின் மகன் புஸ் வரலாற்றின் எந்த சர்வாதிகாரிக்கும் குறைந்தவனில்லை.

Monday 8 October 2007

விசர்கடி வைத்தியம்

~காதல் வெற்றிப் பேரனி அல்ல அலலூயா~என்று டேவிட் கிறே பிரார்த்தித்துக் கொண்டிருந்த வானொலியில் இருந்துவேண்டா வெறுப்பாக வெளிக்கிழம்பி வந்தது பல்வரிசை.சிரிப்பை பத்திரப் படுத்துவதற்காய் அறுந்து விழுந்த காதல் பிரார்த்தனையை நரம்புகளுக்குள் ஒழித்து வைத்தேன்அவற்றின் துள்ளளில்மயிர்கூச்செறிந்த உடம்புதொலைக்காட்சியை மறைத்துக்கொண்டிருந்தது.அங்கேவிசர்கடி வைத்தியத்தின் நவீன உத்திகள்பாடிக்கொண்டிருந்தனர்.பற்கல் இல்லாததால் பாம்புவிசத்தால் சிரிக்குமாம்.

------இனி


சிறிலங்காவில் சிக்கன் ‘Shit’ கிளறுவதால்.சத்தியம் செய்து சைவமானவர்களுக்கும்
முருகனுக்கு தவமிருந்துSun Shine ல் பிறந்தோருக்கும்
பல்செட் கட்டிய மற்றும்பல்லை செட் பண்னக் கட்டிய கன்னிகளுக்கும்மற்றும்
அந்தாக்கள் போல்அந்தரப்பட்டுpeace க்கும் privilege க்கும் pass தேடும் foxy மனிதர்களுக்கும்என்
hart ன் கதவைத் திறந்து கொண்டு காசாசை இல்லாமல் கதைக்க விருப்பம்.

சிறப்பாக குறித்த திகதியில் குடல் இடறும் body விட்டு
கோனலும் மானலுமில்லா heaven க்குகூட்டிப்போறானாம் ஒருத்தன்.
பேருக்கு நீ போருக்கு நான்காசுக்கு நீ கஸ்டத்துக்கு நான் என்றுபழய சினிமா வசனம் போல் எத்தனை நாட்கள் பிரிஞ்சு கிடப்பம்?
ஆலைகளும் அவை தள்ளும் புகையிழுக்க சோலைகளும் செய்து
இணை பிரியா புரட்சிக்கு வாடும் நீயும் அதனால் மருட்சி கொண்டுஎன்ர ஜயோ வென்றழும் நானும்
hart ஜ திறந்து காசாசை இல்லாமல் கதைச்சால்உடம்பு வியர்க்கும் அல்லதுஒரு நாளைக்கு 15 தரம் ஆத்திரம் வரும்
வீனா அதையேன் விரையம் செய்வான்?
வாரானாம் ஒருத்தன் அவனோடு போவோம்சேர்ந்தே போய் Check Out ஆவோம்
அப்பதான் தெரியும் ஆர் ஆரென்டு என்ன உறவெண்டு.

இன்னுமொரு மில்லியன் ஆண்டு கழிச்சுசூரியன் உருகிக் கொண்டிருக்கேக்க
ஊண்னோடு கதைக்க எனக்கு நேரமிருக்காது.
Mass Suicide ல் மனங்கொண்டு வா.
நல்ல மனிதர்போல் மானுக்கும் கொம்புண்டாம்.கெட்ட கேட்டுக்கு கோழிக்கும் ருசியுண்டாம்.
---

Thursday 20 September 2007

கொக்கட்டிச்சோலை

கொக்கட்டிச்சோலை


கொக்கட்டிச் சோலை ஒரு பாலை - அங்கு நான்கைககட்டிச் சீவித்த வேளை - ஒரு விடியாத காலை
மம்பெட்டி கொண்டாந்து தருவார் - மத்தியானம்சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் - பேந்துவெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட - பேணிஇல்லாட்டி என்ன உந்தப் பிளாவப்பிடி என்பா
பிஞ்சுப்பனை செத்துப்போச்செண்டா கவலைஅஞ்சு செடி கருகிப்போச்செண்டா கவலைமாய்ஞ்சு மாய்ஞ்சு நானுடையும் வேளைகொஞ்சம்கூட மனக்கவலை இல்லை
அவவுக்கு புதுக்கவிதை போலவொரு பிள்ளைதாயின் எடுப்புக்கும் சாய்ப்புக்கும் இணையாககடுப்பான உடம்போட - தோட்டத்தில்கண்டபடி திரிஞ்சா
கள்ளடிச்சுப்போட்டு நானொருக்காகட்டிப் புடிச்சிட்டன்
பொல்லா வியாதி வந்தாப்போல் துடிச்சா - நான்வெள்ளாச்சி தெரியுமோ வென்றழுதா
அவ வீட்டு மாட்டுக்கும் வெள்ளச்சி பேர்
பொல்லாப் பிழையடி பெட்டசொல்லாதே என்று சொன்னதில் விட்டிட்டா
பின்பிந்தவெள்ளாளர் வந்தார்கள் வெளிநாடுவெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று - மக்கள்கலர்களராய் கலப்புக் கலியாணங்கள் செய்வாராம்
சிவப்புக் கொடியணிந்த தோழி அவவின்ஆங்கிலப் படிப்புக்கு வழி சொன்னாவெள்ளயனைப் பிடியடி தானா வரும் மொழி என்று
இன்னும்வெள்ளையனோ கறுப்பனோவலையில் விழுந்த பாடில்லைதங்கச்சி வாயில் இங்கிலீசுதவண்டபாடுமில்லை
சிவப்புக் கொடியணிந்த தோழிதமிழ் நாட்டில் தமிழ் கற்றுஅகதிகள் புனர் வாழ்வில் கருத்தோடு இருந்தா
இந்த வெள்ளச்சியும் வெள்ளாச்சியும்இணைபிரியா நன்பர்கள் என்றுவெளியில் கதைஊரில் கதைஉலகெல்லாம் கதை
வீட்டில் விசேசமென்றால்வெள்ளச்சிக்கு சொல்லித்தான் மறுவேலை
எடுபிடிக்குப்போன நான்எட்டி நின்று பார்த்தேன்
வந்து போகும் தமிழர்கள்வெள்ளச்சியை வின்ணாணம் பார்க்கசேர்ந்து பார்த்த நானும் - ஒருக்காபியர் அடிச்சுப்போட்டுகட்டிப்பிடிச்சிட்டன்
தப்போ தவறோ என்றுஎட்டி நடக்க இருந்த என்னைஎட்டி இழுத்துபல்லும் பல்லும் இடிபட இட்டா ஒரு முத்தம்
பட்டென்று வந்ததொரு பொறாமைஊரில இவையோட பழகோம் - நீயோபடுப்பதென்பது மேலும் கீழாமென்று எடுத்தோதிஆக்கினை வரிகளை அடுக்கியும்வெள்ளச்சி என்னை விடாப்பிடியா காதலிச்சா
கள்ளியடி அவள்,யாருக்கும் சொல்லாமல் ஒருநாள் இரவுக்கு காதலிச்சாஅதுபோதுமென்றில்லை ஆனாலும் காணும்!
என்னை நினைச்சு நினைச்சு வெள்ளாச்சி உருகநான் வெள்ளச்சியோடிருப்பேன்
அவ வீட்டு மாட்டுக்கும் அதுதானே பேர்
இதுகள் மிருகங்கள்ஆடு மாடு நாய் பூனை போலகண்டபடி சேருதுகள் கண்டபடி பிரியுதுகள்என்றவா தாய்க்கு கடிதம் போட்டா
படிச்ச வெள்ளாட்டிஏதோ புதினமென்றுவிழுந்து விழுந்து சிரிச்சா.