Thursday, 25 October 2007

சூப்பர்மானின் ஆனாதிக்கம்

சூப்பர்மானின் ஆனாதிக்கம்
நாட்வெஸ்டில் லோன் எடுத்து
நல்ல காரெடுத்துநான் மீன்பிடிக்க போனா
நல்ல கட்டை -அந்த வல்ல பொட்டை
சொத்திப் பல்லோடு எட்டி விழுந்தால்.
பற்றியெடுத்த மட்டில்,வெட்டி விட முடியாது
கட்டிவிடு என்றால்.
உன் புலிப்பல்லை கழட்டி மண்வெட்டிக்குதவ ஆபிரிக்கா அனுப்பு.
ஆசிய குஞ்சுகளுக்குஉன் உடம்பெல்லாம் அடிச்சிருக்கும் ஆணிகளை அனுப்பு.
காதோரம் வழியும் உன் கண்றாவியை வேனுமென்றால்
Nஐhர்ஐ; புஸ்சுக்கு அனுப்பு.
நாரியில் படம்போட்டு
வயித்தில் சலங்கை கட்டும்
உன்விளையாட்டுப் புத்திக்கு
சேய் பிறந்தா நாயாகும்
நாய் பிறந்தா பேயாகும்
பேய் பிறந்தா நீயாகும்
ஆதலின்
ஓரு ஆறு பிள்ளை தத்தெடு
வீட்டை வித்துவிடுபூட்டை விழுங்கி பிளாட்பாரமாகிவிடு
என்றெல்லாம்
நான் கேக்கதிக்கித் தினறி
வத்தி வறண்டு
சிலம்புடைத்துச் சினந்து சீறி
மதுரைச் சிறியோடு- போக மனங்கொண்ட பாவாய்
சத்தி எடுத்தாளடா என் சித்தம் சிதறிவிழ
சத்தி எடுத்தாளடா
நாளைக்கு இனிநான் சூப்பர்மான் உடுப்புப் போட்டு
‘பாதர்’ உரிமைக்காக கட்டிடங்கள் ஏறவேண்டி வரும்

No comments: