கொக்கட்டிச்சோலை
கொக்கட்டிச் சோலை ஒரு பாலை - அங்கு நான்கைககட்டிச் சீவித்த வேளை - ஒரு விடியாத காலை
மம்பெட்டி கொண்டாந்து தருவார் - மத்தியானம்சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் - பேந்துவெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட - பேணிஇல்லாட்டி என்ன உந்தப் பிளாவப்பிடி என்பா
பிஞ்சுப்பனை செத்துப்போச்செண்டா கவலைஅஞ்சு செடி கருகிப்போச்செண்டா கவலைமாய்ஞ்சு மாய்ஞ்சு நானுடையும் வேளைகொஞ்சம்கூட மனக்கவலை இல்லை
அவவுக்கு புதுக்கவிதை போலவொரு பிள்ளைதாயின் எடுப்புக்கும் சாய்ப்புக்கும் இணையாககடுப்பான உடம்போட - தோட்டத்தில்கண்டபடி திரிஞ்சா
கள்ளடிச்சுப்போட்டு நானொருக்காகட்டிப் புடிச்சிட்டன்
பொல்லா வியாதி வந்தாப்போல் துடிச்சா - நான்வெள்ளாச்சி தெரியுமோ வென்றழுதா
அவ வீட்டு மாட்டுக்கும் வெள்ளச்சி பேர்
பொல்லாப் பிழையடி பெட்டசொல்லாதே என்று சொன்னதில் விட்டிட்டா
பின்பிந்தவெள்ளாளர் வந்தார்கள் வெளிநாடுவெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று - மக்கள்கலர்களராய் கலப்புக் கலியாணங்கள் செய்வாராம்
சிவப்புக் கொடியணிந்த தோழி அவவின்ஆங்கிலப் படிப்புக்கு வழி சொன்னாவெள்ளயனைப் பிடியடி தானா வரும் மொழி என்று
இன்னும்வெள்ளையனோ கறுப்பனோவலையில் விழுந்த பாடில்லைதங்கச்சி வாயில் இங்கிலீசுதவண்டபாடுமில்லை
சிவப்புக் கொடியணிந்த தோழிதமிழ் நாட்டில் தமிழ் கற்றுஅகதிகள் புனர் வாழ்வில் கருத்தோடு இருந்தா
இந்த வெள்ளச்சியும் வெள்ளாச்சியும்இணைபிரியா நன்பர்கள் என்றுவெளியில் கதைஊரில் கதைஉலகெல்லாம் கதை
வீட்டில் விசேசமென்றால்வெள்ளச்சிக்கு சொல்லித்தான் மறுவேலை
எடுபிடிக்குப்போன நான்எட்டி நின்று பார்த்தேன்
வந்து போகும் தமிழர்கள்வெள்ளச்சியை வின்ணாணம் பார்க்கசேர்ந்து பார்த்த நானும் - ஒருக்காபியர் அடிச்சுப்போட்டுகட்டிப்பிடிச்சிட்டன்
தப்போ தவறோ என்றுஎட்டி நடக்க இருந்த என்னைஎட்டி இழுத்துபல்லும் பல்லும் இடிபட இட்டா ஒரு முத்தம்
பட்டென்று வந்ததொரு பொறாமைஊரில இவையோட பழகோம் - நீயோபடுப்பதென்பது மேலும் கீழாமென்று எடுத்தோதிஆக்கினை வரிகளை அடுக்கியும்வெள்ளச்சி என்னை விடாப்பிடியா காதலிச்சா
கள்ளியடி அவள்,யாருக்கும் சொல்லாமல் ஒருநாள் இரவுக்கு காதலிச்சாஅதுபோதுமென்றில்லை ஆனாலும் காணும்!
என்னை நினைச்சு நினைச்சு வெள்ளாச்சி உருகநான் வெள்ளச்சியோடிருப்பேன்
அவ வீட்டு மாட்டுக்கும் அதுதானே பேர்
இதுகள் மிருகங்கள்ஆடு மாடு நாய் பூனை போலகண்டபடி சேருதுகள் கண்டபடி பிரியுதுகள்என்றவா தாய்க்கு கடிதம் போட்டா
படிச்ச வெள்ளாட்டிஏதோ புதினமென்றுவிழுந்து விழுந்து சிரிச்சா.
Thursday, 20 September 2007
Subscribe to:
Posts (Atom)